பைனாப்பிள் கேசரி | Pineapple kesari

பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி




என்னென்ன தேவை?

ரவை – 1 கப்,
தண்ணீர் – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் கலர் – சிறிதளவு,
நெய் – சிறிதளவு,
முந்திரி – தேவைக்கு.
ஏலக்காய் சேர்க்க தேவையில்லை.

எப்படிச் செய்வது?

சிறிதளவு நெய் யில் ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பில் இருமடங்கு தண்ணீர் ஊற்றி, கொதி வந்தவுடன் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்தபின் சர்க்கரையைக் கொட்டி சிறிது சிறிதாக நெய்யை ஊற்றவும். கீழே இறக்கி வைத்து எசென்ஸ், கலர், முந்திரி, தேவைப்பட்டால் பழத்துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment