ரசகுல்லா | Rasagulla

ரசகுல்லா செய்வது எப்படி

ரசகுல்லா தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
மைதா – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப் (புளிக்காதது)
சீனி – 400 கிராம்
தண்ணீர் – 1/2 லிட்டர்

ரசகுல்லா செய்முறை

பாலைக் கொதிக்க வைத்து தயிர் சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். நன்கு திரிந்து தண்ணீர் பிரிந்த பின் துணியில் வடிகட்டி சுமார் 4 மணி நேரம் வைத்து கட்டியாக பனீரை எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் மைதாமாவைப் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக செய்யவும். ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உருண்டைகளை போட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும். பின் 10 நிமிடங்கள் மூடாமல் வேக வைக்கவும். சுவையான ரசகுல்லா தயார்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment