மட்டன் கைமா செய்வது எப்படி
தேவையானப் பொருட்கள்
- கொத்துக்கறி-அரைக் கிலோ
- வெங்காயம்-நான்கு
- பச்சைமிளகாய்-ஆறு
- இஞ்சி-ஒரு துண்டு
- பூண்டு-ஆறு பற்கள்
- கடலைப் பருப்பு-ஒரு கோப்பை
- முட்டை-ஆறு
- தேங்காபூ-அரைக் கோப்பை
- மிளகாய்த்தூள்-அரைதேக்கரண்டி
- மஞ்சத்தூள்-அரைதேகரண்டி
- மிளகுத்தூள்-அரைதேக்கரண்டி
- கடுகு-அரைதேக்கரண்டி
- சோம்பு-அரைத்தேக்கரண்டி
- பட்டை-இரண்டு துண்டு
- கிராம்பு-நான்கு
- ஏலக்காய்-நான்கு
- கறிவேப்பிலை-பத்து
- கொத்தமல்லி-ஒரு பிடி
- உப்பு-இரண்டு தேக்கரண்டி
- எண்ணெய்-அரைக்கோப்பை
- கொத்துக்கறியையும், ஊறவைத்த கடலைபருப்பையும் அரைத்தேக்கரண்டி உப்புத்தூளை போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் பச்சைமிளகாயை மெல்லியதாக அரிந்துவைத்துக் கொள்ளவும்.
- இஞ்சி பூண்டுடன் வாசனை போருட்களை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி மிளகுத்தூள்,உப்புத்தூள்,மஞ்சத்தூளை போட்டு நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
- சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு பொரிந்ததும் சோம்பை போட்டு தொடர்ந்து வெங்காயம் பச்சைமிளகாயை போட்டு நன்கு வறுக்கவும்.
- பிறகு அரைத்துள்ள விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.தொடர்ந்து மீதமுள்ள உப்புத்தூள்,மிளகாய் தூளை போட்டு வதக்கி வேகவைத்துள்ள கறி கலவையை கொட்டி கிளறவும்.
- தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கிளறி முட்டை உதிரி உதிரியாகும் வரை கிளறி விடவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காபூவைப் போட்டு நன்கு கிளறிவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.
0 comments:
Post a Comment