முக அழகிற்கு தகுந்த புருவ மாற்றம் | Different Shapes of Eyebrows

முக அழகிற்கு தகுந்த புருவ மாற்றம்
முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
• குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.
• நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.
• ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.
• அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.
• புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.
• சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.
• புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.
• கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
• வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.
• நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.
• நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.
• வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.
• உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment