முழங்கை,கால் கருப்பு நிறம் மறைய | Easy Way To Reduce Darkness In Elbow And Knee

முழங்கை,கால் கருப்பு நிறம் மறைய
பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை.
சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை……
• ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
• 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
• தினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.
• தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் காட்டனால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.
- மேலும் மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment