பருவினால் ஏற்பட்ட தழும்பு மறைய பேஸ் பேக் | Face Pack To Remove Acne Scars

பருவினால் ஏற்பட்ட தழும்பு மறைய பேஸ் பேக்
பருக்களைக் கிள்ளவோ, தொடவோ கூடாது. ஃபேஷியல் செய்யக் கூடாது. சாதாரணமாக வரும் பருவானது, தானாகவே சரியாகி விடும். அதைக் கிள்ளி, அழுத்தித் தொந்தரவு செய்தால்தான் பிரச்சனையே! சூடான எதையும் சாப்பிட வேண்டாம்.
கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரைக் குடிக்கவும். நான்கு பல் பூண்டை அரைத்து, வலியுள்ள பழுத்த பருவின் மேல் வைக்கவும். அதற்கு மேல் கீழே குறிப்பிட்டுள்ள பேக் போடவும். சிறிது வேப்பந்தளிர் எடுத்துக் கையால் கசக்கி, சாறு எடுக்கவும்.
கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவில் விரலைத் தொட்டு, வேப்பம் சாற்றையும் தொட்டு, பரு மேல் பொட்டுப் போல வைக்கவும். பருக்கள் பரவலாக இருந்தால், இதையே முகம் முழுக்கத் தடவவும். இந்த முறையை வாரம் 2 முறை என தொடர்ந்து செய்து வந்தால் பரு தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment