எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்
>இந்த ஃபேஷியல் எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்ற வகையில் மூன்று விதத்தில் செய்யலாம்.
• ஓட்ஸ் 3 தேக்கரண்டி, தேன் ½ தேக்கரண்டி மற்றும் பச்சை பால் ½ தேக்கரண்டி ஆகிய பொருள்களை நன்றாக பேஸ்டாக கலக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஷியல் வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் இவை குளிப்பதற்கு முன் உடம்பில் தடவியும் குளிக்கலாம்.
• எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி, ஓட்ஸ் 4 தேக்கரண்டி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நல்ல பலபலப்பான முகத்தை பெறலாம்.. இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிக சிறந்த ஃபேஷியல் ஆகும்.
• தயிர் இரண்டு ஸ்பூன் மற்றும் ஓட்ஸ் 4 தேக்கரண்டி சேர்த்து பேஸ்டாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யவும். இது காய்ந்ததும் சாதாரண நீரில் கழுவவும். இது சாதாரண சருமத்திற்கு ஏற்ற மிக சிறந்த ஃபேஷியல் ஆகும். இந்த பேஸ்டை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து குளித்தால் சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி சருமம் பொலிவடையும்.
0 comments:
Post a Comment