பழப் பாயசம் | Fruit Payasam

பழப் பாயசம் செய்வது எப்படி

என்னென்ன தேவை?


  • பழ டின் – 1 அல்லது சதுரத் துண்டுகளாக்கிய ஆப்பிள்,
  • பைன் ஆப்பிள், விதையில்லாத பச்சை, கறுப்பு திராட்சைகள்,
  • செர்ரிப் பழம் கலவை – 1 கப்,
  • பால் – 1 லிட்டர்,
  • பாதாம் – 5,
  • முந்திரி – 5,
  • கஸ்டர்ட் பவுடர் – 1 டேபிள்ஸ்பூன்,
  • சர்க்கரை – 1/2 கப்,
  • பழ எஸென்ஸ் – 3 சொட்டு,
  • சாரைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
  • நெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாதாமையும் முந்திரியையும் வெந்நீரில் ஊறப்போடவும். பாதாமை உரித்து, முந்திரியுடன் அரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். கஸ்டர்ட் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கரைத்துக் கொதிக்கும் பாலில் ஊற்றவும். சர்க்கரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கி இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் அதில் பழ எஸென்ஸ் மற்றும் பழக் கலவையைச் சேர்க்கவும். சாரைப் பருப்பை நெய்யில் வறுத்துத் தூவி, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் குளிர வைத்துப் பரிமாறவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment