கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு | Green Tea Will Make You Slim

கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு




கிறீன் டீ ஒவ்வொருநாளும் குடித்து வந்தால் உடம்பு மெலியுமாம். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். இரு பிரிவாக எலிகளை பிரித்து, அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை கொடுத்து வந்தனர்.

ஒரு பிரிவு எலிகளுக்கு மட்டும், கிறீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின்-3-கேலேட் (இஜிசிஜி) என்ற மூலப்பொருள் கொடுக்கப்பட்டது.

ஆய்வில் இஜிசிஜி மூலப்பொருள் கொடுக்கப்பட்ட எலிகளின் உடல் எடை, மற்ற எலிகளை காட்டிலும் குறைவாக இருந்தது. அவற்றின் உடலில் குறைவான அளவு கொழுப்பு கிரகிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஜோசுவா லேம்பர்ட் கூறும்போது, கிரீன் டீயில் உள்ள இஜிசிஜி மூலப்பொருள், உடல் கொழுப்பு கிரகிப்பதை கணிசமாக குறைக்கிறது. மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

தினமும் 10 கப் கிரீன் டீ குடிப்பதன் மூலம் மனிதர்களும் இந்த பயனை அடைய முடியும். குண்டு உடல் உள்ளவர்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு நடந்து வருகிறது என்றார்.

இதயநோய், புற்றுநோய் போன்றவற்றுக்கும் கிரீன் டீ அருமருந்து என்று ஏற்கனவே பல ஆய்வுகள் கூறியுள்ளன. இனி கிறீன் டீக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகின்றது.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment