மலாய் குலாப் ஜாமூன் | Gulab Jamun

மலாய் குலாப் ஜாமூன் செய்வது எப்படி 
தேவையான பொருட்கள்:


  • பால் பவுடர் – 1 கப்
  • ரவை – 4 டேபிள் ஸ்பூன்
  • மைதா – 4 டேபிள் ஸ்பூன்
  • பால் – 1 கப்
  • பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
  • நெய் – தேவையான அளவு
  • உள்ளே நிரப்புவதற்கு… மலாய் – 1 கப்
  • தேங்காய் – 1/2 கப் (துருவியது)
  • சர்க்கரை பாகுவிற்கு… சர்க்கரை – 2 கப்
  • தண்ணீர் – 2 கப்


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, பால் பவுடர், பால், பேக்கிங் பவுடர் மற்றும் நெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், அதில் மீண்டும் சிறிது பால் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் சிறு உருண்டைகளாக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு, தீயை குறைவில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி, அதனை இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும்.
இப்போது நெய்யானது காய்ந்திருக்கும். இந்நிலையில் தீயை குறைவில் வைத்து, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகுவில் போட்டு, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 3-4 மணிநேரம் ஆனப் பின்பு, ஜாமூன்களை வெளியே எடுத்து, அதில் உள்ள பாகுவை லேசாக பிழிந்துவிட்டு, அதன் நடுவே லேசாக வெட்டி, அதன் நடுவே மலாயை வைத்து, அதன் மேல் துருவிய தேங்காயை தூவி விட வேண்டும். இதேப் போல் அனைத்து குலாப் ஜாமூன்களையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான மலாய் குலாப் ஜாமூன் ரெடி!!!
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment