முகம் வெள்ளையாக மாற செய்ய வேண்டியவை
வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து புதுப்பொலிவு பெறுவதற்கு வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பேஷியல் சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது.
இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து பூசினால் தோல் அழகு பெறும்.
ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் லெமன் ஜூஸ் கலந்து போடலாம்.
பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
பப்பாளிச் சாற்றை முகத்தில் பூசினால் வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
0 comments:
Post a Comment