வெள்ளைப்பூண்டின் மகத்துவம்
வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும். உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது.வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும். டான்ஸில் என்கிற உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து. பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment