ஸ்பெஷல் மட்டன் பிரியாணி | Mutton Briyani

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி 


தேவையான பொருட்கள்


  • மட்டன் – 1/2 கிலோ
  • அரிசி – 1/2 கிலோ
  • தயிர் – 1 கப்
  • மிளகாய்த்தூள், தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • வெங்காயம், தக்காளி – 200 கிராம்
  • புதினா இலை – 1/2 கட்டு
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 குழிக்கரண்டி


செய்முறை

* மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

* அரிசியை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கொதிக்கும் சமயம் இரண்டு ஏலக்காயை உரித்துப் போடவும்.

* வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, பச்சை மிளகாய், தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் மட்டன், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றவும்.

* மட்டன் வெந்த பிறகு, சாதத்தின் மேல் மட்டன் மசாலா கலவை ஒரு லேயர் போடவும். பிறகு சாதம், மட்டன் மசாலா கலவை, இப்படி சேர்த்து மேலே தம் கட்டி 20-லிருந்து 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

* அதன்பிறகு எடுத்து கிளறினால், சாதம் பொலபொலவென்று உதிரியாக இருக்கும். பிரியாணி ரெடி
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment