மட்டன் கபாப் | Mutton Kabab

மட்டன் கபாப் செய்வது  எப்படி 
தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா – 1/2 கிலோ
வெங்காயம் – 1
பப்பாளிக்காய் – சிறு துண்டு
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 8 பல்
பாதம்பருப்பு – 4-5
முந்திரிபருப்பு – 10கிராம்
கசகச – 1ஸ்பூன்
ஜாதிக்காய் தூள் – 1சிட்டிகை
ஜாதிபத்ரி – 1
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
பட்டை – சிறிது
ரோஸ்வாட்டர் – 1 ஸ்பூன்
கடலைமாவு – 2ஸ்பூன்
பால் – 1/4 கப்
குங்குமப்பூ – சிறிது
உப்பு – தேவைக்கு
நெய் – தேவைக்கு

செய்முறை:

அரைக்க வேண்டியவை: மட்டன் கீமாவை சுத்தம் செய்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். பப்பாளிகாயினை அரைக்கவும். வெங்காயத்தை நீளமாக வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி ஆற வைத்து பின்பு அதனையும் தனியாக அரைத்து வைத்துக கொள்ளவும். கசகசா, பாதம்பருப்பு, முந்திரிபருப்பு யும் அரைக்கவும். இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாதிபத்ரி அனைத்தையும் அரைக்கவும்..

அரைத்த அனைத்து பொருட்களையும் கீமாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, ரோஸ்வாட்டர், கடலைமாவு, ஜாதிக்காய்பொடி சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசைந்து 5-6 மணிநேரம் ஃபிரிஜரில் வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து 10 நிமிடம் கூல் போன பின்பு கபாப் கம்பியில் நீட்டமாக கீழே படத்தில் உள்ளதுபோல் உருட்டி வைக்கவும்.

2d
இந்த கபாப் கம்பிகளை தந்தூரி அடுப்பில் வைத்து தணலில் காட்டும் பொழுது இதன் மேலே பாலில் கலந்த குங்குமப்பூவை சுற்றி வரை ஊற்றவும்.
10 நிமிடம் தணலில் காட்டினால் போதும் கபாப் ரெடியாகி விடும். பிறகு கையில் க்ளவுஸ் போட்டு கம்பியில் இருந்து கபாப்பை எடுக்கும் பொழுது மெதுவாக எடுக்கவும். இல்லையென்றால் சரியாக வராமல் கபாப் உடைந்துவிடும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment