சேமியா பாயசம் | Payasam

சேமியா பாயசம்  செய்வது எப்படி


என்னென்ன தேவை?


  • சேமியா – 200 கிராம்
  • சீனி – 250 கிராம்
  • பால் – அரை லிட்டர்
  • முந்திரி – 10
  • ஏலக்காய் – 4
  • நெய் – ஒன்றரை மேசைக்கரண்டி
  • கேசரி பவுடர் – 2 சிட்டிகை


எப்படிச் செய்வது?

சேமியாவை உடைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சேமியாவை போட்டு ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை போடவும்.

2 நிமிடம் கழித்து கேசரி பவுடர் போட்டு 5 நிமிடம் கழித்து சீனியை சேர்த்து சீனி கரையும் வரை 8 நிமிடம் கிளறி விட்டு அடுப்பிலேயே வைக்கவும்.

8 நிமிடம் கழித்து ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்கி விடவும்.

இறக்கி வைத்த பிறகு மேலே வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment