சர்க்கரைப் பொங்கல் | Pongal

சர்க்கரைப் பொங்கல் செய்வது  எப்படி




இதுவரை பொங்கலை ப்ரெஷ்ஷர் குக்கரில்தான் செய்திருக்கிறேன். இந்த வருடம் குக்கரில் இல்லாமல் பாத்திரத்தில் செய்வோம் என முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இனிப்பான பொங்கலுடன் எனக்குக் கிடைத்த இனிப்பான பரிசின் விவரங்கள் பொங்கலைத் தொடர்ந்து..


தேவையான பொருட்கள்

பச்சரிசி – 3/4கப்
பாசிப்பருப்பு -1/4கப்
வெல்லம் – 1 அல்லது 11/2 கப் (சுவைக்கேற்ப அனுசரித்து போட்டுக்கொள்ளவும்)
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை -சிறிது
நெய்- 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் [விரும்பினால் சேர்க்கலாம், அல்லது நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.]
தண்ணீர் – 3 கப்

செய்முறை

பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.
அரிசியை இரண்டு மூன்று முறை களைந்து பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். [புது அரிசி எனில் ஊறத்தேவையில்லை, என்னிடம் இருந்தது கொஞ்சம் பழைய சோனாமசூரி அரிசி! ;)]

பாலுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பால் பொங்கியதும் ஊறிய அரிசி-பருப்பைச் சேர்க்கவும்.

மிதமான தீயில் அரிசி பருப்பு நன்கு வேகும்வரை சமைக்கவும்.

அவ்வப்போது கிளறிவிட்டு, வேகவைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி பொங்கல் நன்றாக வெந்ததும், கரண்டியால் நன்றாக மசித்துவைக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி பொங்கலில் சேர்த்து கிளறிவிடவும்.

ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயையும் பொடித்துச் சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார். பரிமாறும்போது மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை சூடான பொங்கல் மீது விட்டு பரிமாறவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment