ரசமலாய் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- பால் - 3 லிட்டர்
- சர்க்கரை – 3 கப்
- தண்ணீர் – 4 கப்
- குங்குமப் பூ – சிறிது
- ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
- தயிர் - 1 கப்
- பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்
ரசமலாய் செய்முறை
பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும். பின் அத்துடன் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து 1 கப் தயிரை அதில் சேர்க்கவும்.
பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும். அந்த மூட்டையில் உள்ள கலவையை தட்டில் கொட்டி உள்ளங்கையால் அழுத்தி பிசையவும். இந்தப் பனீரை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும். மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பனீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும். இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

0 comments:
Post a Comment