நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் | Remedy For Diabetes

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே.

 நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது.

பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment