ஆரோக்கியமான சருமத்திற்கு எளிய குறிப்புகள்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு தெளிவான, ஆரோக்கியமான சருமம் அமைவது இல்லை. ஒரு சிலரே அந்த அதிர்ஷ்டம் பெற்றவர்கள். ஒளிரும் சருமம் வேண்டுமா? சருமத்தைப் பேணுவது ஒன்றும் கடினம் இல்லை, ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உடம்பில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறவும் நிறைய தண்ணீர் பருகுவது நல்லது, நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் இதை கடைப்பிடித்தால் உங்கள் சருமம் என்றும் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.
உங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம், உடற்பயிற்சி செய்யும் போது ஆக்சிஜன், உடம்பின் ரத்த ஓட்டத்தை சீராகவும், தோலைப் பிரகாசமாகவும் வைத்து கொள்ளும். வியர்வையின் காரணமாக உடம்பில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுவது மட்டும் இல்லாமல், முகப்பரு, வியர்வை துளை அடைப்பும் நீங்கும். எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்
வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் உள்ள இறந்த செல்களை கட்டாயம் நீக்க வேண்டும், இதை முகத்திற்கு மட்டுமின்றி உடம்பிற்கும் கூட செய்ய வேண்டும்
கூடுமானவரை தெருவில் விற்கும் பொருட்கள், பதப்படுத்தப்படாத உணவுகள், பொறித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பிய பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்தமான உணவை உட்கொள்வது நம் உடலுக்கும், சருமத்திற்கும் நல்லது.
சருமத்தின் இயல்பு தன்மை பாதிக்காமல் இருக்க கட்டாயம் சன்ஸ்கிரீன் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.
வெயில் காலமோ, மழை காலமோ வெளியில் செல்லும் போது சருமம் கறுக்காதிருக்க சன்ஸ்கிரீன் பொருட்களை கட்டாயம் பயன்படுத்தவேண்டும். இதனை சருமத்தில் பூசிக்கொண்டால் அலட்ரா வயலெட் கதிர்கள், சரும சுருக்கம், கருமை இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
0 comments:
Post a Comment