பூண்டு வத்தக் குழம்பு | Vatha Kozhumbu

பூண்டு வத்தக் குழம்பு செய்வது  எப்படி

என்னென்ன தேவை?

சுண்டைக்காய், கொத்தவரங்காய் மாதிரி ஏதேனும் ஒரு வற்றல் – 1 டேபிள்ஸ்பூன், பூண்டு – 1 கைப்பிடி, புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

புளியைக் கரைத்து வடிகட்டவும். அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, வற்றலையும், பூண்டுப் பற்களையும் தனித்தனியே வதக்கி வைக்கவும். மறுபடி சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியே வைக்கவும். புளிக் கரைசல் நன்கு கொதித்து வரும்போது, அதில் வதக்கிய பூண்டு, வற்றல், தாளிப்புப் பொருள்களைச் சேர்க்கவும். குழம்பு பாதிக்குப் பாதியாக சுண்டும் அளவுக்குக் கொதித்ததும் இறக்கவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment