சைவ உணவுகளே கர்ப்பிணிகளுக்கு சிறந்தது | Vegetarian Diet Is Best For Pregnant

சைவ உணவுகளே கர்ப்பிணிகளுக்கு சிறந்தது


கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிலும் சைவ உணவுகள், அசைவ உணவுகள் என இரண்டு உணவுகளில் எதை எடுத்துக்கொள்வது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கும்.

பொதுவாக, பெண்கள் கர்ப்ப காலத்தில் சைவ உணவுகளின் மூலம் தான் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற முடியும்.

முக்கியமாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும்.

ஆகவே கர்ப்பிணிகள் புரோட்டீன் அதிகம் நிறைந்த சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இதர சத்துக்களான கால்சியம், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்தவைகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

பன்னீரில் புரோட்டீன் மட்டுமின்றி, கால்சியமும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே கர்ப்பிணிகள் பன்னீரை அவ்வப்போது எடுத்து வருவது நல்லது. பச்சை இலைக் காய்கறிகளில் கலோரிகள் இல்லாததால், அச்சமின்றி கர்ப்பிணிகள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காராமணியில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளதால், இதனை கர்ப்பிணிகள் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது.

தயிரில் கால்சியம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கிறது.

எனவே கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டால், உணவில் தயிரை அதிகம் சேர்த்து கொள்ளலாம். கேரட்டில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால், இதனை தினமும் உணவில் கர்ப்பிணிகள் சேர்த்து வந்தால், குழந்தையின் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

பீன்ஸில் உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் எனர்ஜியைக் கொடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால், இவை குடலியக்கத்தை சீராக வைக்கும்.

நட்ஸ்களில் பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் ஈ கிடைக்கும். எனவே இதனை ஸ்நாக்ஸாக எடுத்து வருவது மிகவும் நல்லது.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment