உதடுகளுக்கு இயற்கை லிப் பாம் | Natural Lip Balm

உதடுகளுக்கு இயற்கை லிப் பாம்



குளிர்காலத்தின் சருமத்தில் உள்ள ஈரப்பசையானது போய்விடும். அதுவும் சருமத்தில் மட்டுமின்றி, உதடுகளிலும் தான். ஆகவே பலர் உதடுகளுக்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த லிப் பாம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

அப்படி கடைகளில் விற்கப்படும் லிப் பாம்களை குளிர்காலம் முடியும் வரை பயன்படுத்தினால், குளிர்காலம் முடிவதற்குள் உதடுகளானது கருமையாகிவிடும். அதுமட்டுமின்றி, உதடுகள் மென்மையிழந்து, வெடிப்புகளுடன் அசிங்கமாக காணப்படும்.

ஆகவே உதடுகளின் அழகைப் பாதுகாத்து, வறட்சி ஏற்படாமல் தடுக்கும் சில இயற்கையான லிப் பாம்களை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம்..

• உதடு வறட்சியைப் போக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாலை உதடுகளில் தடவிக் கொண்டால், வறட்சி நீங்குவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.

• கடைகளில் விற்கப்படும் லிப் பாம்கள் கிளிசரின் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. ஆகவே அத்தகைய கிளிசரினை நேரடியாக உதடுகளில் தடவினால், உதட்டு வறட்சி தடுக்கப்படுவதோடு, உதடுகளும் பிங்க் நிறத்தில் மாறும்.

• தேனை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அதனை வறட்சி ஏற்படும் உதடுகளை மசாஜ் செய்தால், உதடுகள் வறட்சி அடையாமல் இருக்கும்.

• உதடு வறட்சிக்கு ஒரு சிறந்த இயற்கையான லிப் பாம் என்றால் அது வெண்ணெய். அதற்கு தினமும் படுக்கும் முன், வெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.

• நெய் கூட உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சக்தி கொண்டவை.
அதுமட்டுமல்லாமல், நெய்யைக் கொண்டு உதடுகளைப் பராமரித்தால், உதடுகள் மென்மையடைவதோடு, உதடுகளின் நிறமும் அதிகரிக்கும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment