பிரட் பக்கோடா | Bread Pakoda

பிரட் பக்கோடா செய்வது எப்படி 
தேவையான பொருட்கள்:


  • பிரட் துண்டுகள் – 5
  • உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்தது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • தண்ணீர் – 1/2 கப்


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் தூள், மாங்காய் தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிரட் துண்டுகளை முக்கோண வடிவில் வெட்டி, அதன் ஒரு பக்கத்தில் தக்காளி கெட்சப்பை தடவி, உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மற்றொரு பௌலில் கடலை மாவு, சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்த கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டில் வைத்துள்ள பிரட்டை கடலை மாவு கலவையில் பிரட்டி போட்டு, 3-4 நிமிடம் பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பிரட் பக்கோடா ரெடி!!!
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment