சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு | Chettinad Mutton Gravy

சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்


  • மட்டன் – 1 /2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 20
  • தக்காளி – 2
  • பூண்டு – 10 பல்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • தேங்காய் துருவியது – 2 – 3 மேசைக்கரண்டி
  • கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 6
  • மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது)
  • மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
  • மசாலா தூள் ( புதிதாக அரைக்க)
  • தனியா – 2 மேசைக்கரண்டி
  • வரமிளகாய் – 8
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பட்டை – சிறு துண்டு
  • ஏலக்காய் – 2
  • கிராம்பு – 2


எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் விழுது
தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


தாளிக்க


பட்டை – 1 /2 ” – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி


செய்முறை

மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், பொண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். மிதமான சூட்டில் அடுப்பை வைக்கவும்.
ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment