சரும கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? | Effects of Lemon On Dark skin

சரும கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?



எலுமிச்சை துண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க எலுமிச்சை துண்டை, நேரடியாக சருமத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, உடனே மாய்ஸ்சுரைசரைத் தடவி விட வேண்டும். இதனால் சருமம் அதிக வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை ஸ்ப்ரே சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சையை நேரடியாகப் பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆம்பிக்கும். ஆகவே அத்தகையவர்கள், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு மற்றும் அதற்கு சமமான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, பின் முகத்தை நீரில் கழுவி, பின்பு எலுமிச்சை ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இப்படி பயன்படுத்த பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ மறக்க வேண்டாம்.

எலுமிச்சை லோசன் 2 பங்கு எலுமிச்சை சாற்றில், 3 பங்கு கிளிசரின் சேர்த்து, அத்துடன் 1 பங்கு ரம் சேர்த்து நன்கு கலந்து, தினமும் சருமத்தில் தடவி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க் ஒரு பௌலில் சரிசமமான அளவில் எலுமிச்சை சாறு, தக்காளி சாறு, வெள்ளரிக்காய் சாறு எடுத்துக் கொண்டு, அத்துடன் சந்தனப் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும். அதிலும் இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment