வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும் | IF you eat Fast Your Weight Will Increase

வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்
சிலர் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆமை வேகத்தில் மெல்ல சாப்பிடுவார்கள். ஆனால் மெல்ல சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சம்மந்தமாக நியூசிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.

40 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை தேர்வு செய்து சிலரை வேகமாக சாப்பிட வைத்தனர். சிலரை மெல்ல சாப்பிட வைத்தனர். அவர்களை பின்னர் ஆய்வு செய்தனர். இதில் வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் எடை குண்டாகி இருந்தது.

மெல்ல சாப்பிடுபவர்கள் சாதாரண உடல் எடையுடன் இருந்தனர். எனவே வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிரிக்கும் என்று ஆய் வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment