மீன் கட்லட் | Fish Cutlet

மீன் கட்லட் செய்வது  எப்படி 



மீன் கட்லட் செய்து மாலை பள்ளியில் இருந்து வரும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள், (என்ன ஆகும் என்று நீங்கள் கேடப்பது எனக்கும் கேட்கிறது) மீண்டும் மீண்டும் செய்து தரச்சொல்லி உ‌ங்களையே சு‌ற்றிசு‌ற்‌றி வருவா‌ர்க‌ள். என்ன குழந்தைகளின் அன்பை பெற தயாரா!?
தேவையான பொருட்கள்
  • மீன் - 1/2 கிலோ
  • உருளைக்கிழங்கு - 2
  • சி-வெங்காயம் – 100 கிராம்
  • பச்சைமிளகாய் – 5
  • சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்
  • மல்லி இலை -1 கொத்து
  • புதினா இலை -1 கொத்து
  • ரஸ்க் –4 (தேவைக்கு ஏற்ப்ப)
  • முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
  • எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்றபா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க்கொ‌ள்ளவு‌ம்.

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment