தந்தூரி சிக்கன் | Tandoori Chicken

தந்தூரி சிக்கன் செய்வது எப்படி 




தேவையான பொருட்கள்



  • கோழி தொடை - 4
  • எண்ணெய் - 1/2 லிட்டர்
  • ஜிலேபி பவுடர் - சிறிது
  • மைதா மாவு - 50 கிராம்
  • கடலை மாவு – 50 கிராம்
  • சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்
  • எலுமிச்சை பழம் – 1
  • இஞ்சி,பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • முட்டை - 1 (வெள்ளை கரு மட்டும்)



செய்முறை:-

  • கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க்காக)
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
  • கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
  • ( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
  • கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment