குங்குமப்பூ – பச்சைப் பட்டாணி புலாவ்
என்னென்ன தேவை?
பாஸ்மதி அரிசி – 1 கப்,
குங்குமப் பூ – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை – தலா 1 டீஸ்பூன்,
ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 2,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
பால் – சிறிதளவு, காஷ்மீரி மிளகாய்த்தூள் – சிறிது,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாலில் குங்குமப்பூவை கரைத்துக் கொள்ளவும். உப்பு, சர்க்கரையை சேர்க்கவும். அரிசியை உதிரி உதிரியாக வடித்து ஆறவிடவும். இதில் பாலில் ஊறிய குங்குமப் பூவை கலந்து வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, நட்ஸ், திராட்சை என்று ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்துக் கொண்டு, சிறிது அலங்கரிக்க எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் மீதி உள்ள நட்ஸோடு காஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் வடித்த சாதத்தை போட்டு சாதம் உடைந்து விடாத அளவு லேசாக கிளறவும். பின் இறக்கி பேக்கிங் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி ஓவன் அல்லது மைக்ரோவேவ்வில் 5 நிமிடம் பேக் செய்து எடுத்து நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
0 comments:
Post a Comment