எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் | How To Walk

எப்படி நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்
தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் தொடங்கும் என்றெல்லாம் மருத்துவர்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

ஆனால் எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் என்ற முறை உள்ளது. அதன்படி நடந்தால் மட்டும் முழுபலனையும் அடைய முடியும்.

நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும். தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது.

அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. எல்லா பயிற்சிகளுமே உடலுக்கு நல்லது தான். ஆனால் இப்போதுள்ள அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பது மிகவும் கடினம்.
எனவே மிகவும் சுலபமான நடைப்பயிற்சியை மேற்கொண்டு அதிக பலனை அடையலாம்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment