தொப்பை குறைய நின்ற நிலையில் செய்யும் பயிற்சி | Exercise To Reduce Tummy In Standing

தொப்பை குறைய நின்ற நிலையில் செய்யும் பயிற்சி

வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பயிற்சிகளில் மிகவும் எளிமையானதும், விரைவில் பலன் தரக்கூடியதும் ஆன பயிற்சி இது. வீட்டில் இருக்கும் பெண்கள் உடல்தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மீது 2 அடி கால்களுக்கிடையே இடைவெளி விட்டு நின்று கொள்ளவும். பின் கைகளை தோள்பட்டைகளுக்கு இணையாக நீட்டிக்கொள்ளவும். பின்னர் மெதுவாக முன்புறமாக குனிந்து வலது கையால் இடது கால் பாதத்தை தொட வேண்டும்.

அடுத்து இடது கையால் வலது கால் பாதத்தை தொட வேண்டும். இவ்வாறு கைகளை மாற்றி மாற்றி வேகமாக கால்களை தொட வேண்டும். இடது கையால் வலது காலை தொடும் போது உடலை வலது பக்கமாக திரும்ப வேண்டும். வலது பக்கம் செய்யும் போது அந்த பக்கம் திரும்ப வேண்டும்.
ஒரு கையால் காலை தொடும் போது மற்றொரு கை படத்தில் உள்ளபடி பின்புறமாக செல்ல வேண்டும். ஆரம்பத்தில் 20 முதல் 30 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது கால் முட்டிகள் மடங்கக்கூடாது. ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment