சிகப்பரிசி பாயசம்:
சிகப்பரிசி-1 டம்ளர்; பால்-1 லிட்டர்;சர்க்கரை-11/2; ஏலப்பொடி; முந்திரி.
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அரிசியுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து சாதம் போல் வடிக்கவும். ஆறியபிறகு அதை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் பால் விட்டு அடித்து வைக்கவும். மீதி பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து அரைத்த சாதத்தைப் போட்டு, விடாமல் கிளறவும். ஒரு கொதி வந்ததும், சர்க்கரை, ஏலப்பொடி , பொடித்த முந்திரியைப் போட்டுக் கிளறி மற்றொரு கொதி வந்ததும் இறக்கவும். பாயசம் தயார். பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும்.
சத்து நிறைந்த இந்தப் பாயசத்தை சூடாகவும் சாப்பிடலாம். அல்லது ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து கண்ணாடி டம்ளரில் விட்டு, சீவிய பாதாம் பிஸ்தாவை , மேலே தூவிக் கொடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
0 comments:
Post a Comment