ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க.
க்ரீன் டீ தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும்
க்ரீன் டீ தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும்
நல்லெண்ணெய் நல்லெண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் தினமும் காலையில் எழுந்ததும், வாயை நீரில் கொப்பளித்த பின்னர், நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 5-10 நிமிடம் கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, இதனை அன்றாடம் பின்பற்றி வர, வாய் துர்நாற்றம் நீங்கும்
கற்றாழை கற்றாழையில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இதன் ஜெல்லைப் பயன்படுத்தி பற்களைத் துலக்குவது நல்லது. மேலும் கற்றாழை சாற்றினை உணவு உண்ட பின்னர் வாயில் ஊற்றி கொப்பளிப்பதும் மிகவும் நல்லது. இவை வாயில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்
கிராம்பு மற்ற பொருட்களையெல்லாம் விட, கிராம்பில் தான் எண்ணற்ற சத்துக்களானது உள்ளது. எனவே இந்த கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்றோ அல்லது கிராம்பு எண்ணெய் கொண்டு ஈறுகளை மசாஜ் செய்தோ வர வேண்டும். இதனால் வாயானது புத்துணர்வுடன் இருக்கும்.
0 comments:
Post a Comment