லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ் | Tips For Long Lasting Lipstick

லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்


பெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கவும், லிப்ஸ்டிக் போடும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் பார்க்கலாம்.

* லிப்ஸ்டிக் போடும் முன், சிறிது பெட்ரோலியம் ஜெல்லைத் உதட்டில் தடவிய பின் லிப்ஸ்டிக் போட்டால், லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்
* நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டுமானால், இரவில் படுக்கும் முன், லிப்ஸ்டிக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து அந்த லிப்ஸ்டிக்கை போட்டால், அது நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.


* லிப்ஸ்டிக் போட்ட பின் பார்க்க சூப்பராகவும், அதிக நேரம் அது நிலைத்து இருக்கவும், உதடுகளுக்கு சிறிது பவுடர் போட்டு, பின்னர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இதனால் லிப்ஸ்டிக் காபி குடித்தால் கூட போகாமல் அப்படியே இருக்கும்.


* தற்போது வயதானவர்களும் லிப்ஸ்டிக் போட ஆரம்பிப்பதால், அவர்கள் நல்ல அடர்ந்த நிறமுள்ள லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுத்து போடாமல், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுத்து போட்டால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


* எப்போதும் லிப்ஸ்டிக் போடும் போது, இரண்டு வகையான நிறங்களை ஒன்றாக போடக்கூடாது. இதனால், அவை சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்தி, உதடுகளின் அழகையே கெடுத்துவிடும்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment