ஃப்ரைடு ரைஸ் | Veg Fried Rice

ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி 


வடித்த சாதம் – 3 கப்
  • வெங்காயம் – 3
  • தக்காளி – ஒன்று
  • மிளகு – ஒரு மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 5
  • பூண்டு – 20 பற்கள்
  • உப்பு – அரை மேசைக்கரண்டி
  • கேரட் – 3
  • எண்ணெய் – அரை கப்
பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும்.

நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த சாதத்தைப் போட்டு மசாலாவுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும். (பாஸ்மதி அரிசி சாதமாக இருந்தால் மிகவும் பொலபொலவென்று இருக்கும்).

பிறகு தோசைக்கரண்டியால் சாதத்தை நன்கு அழுத்தி சமப்படுத்தி, 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

எளிதாகச் செய்யக் கூடிய ஃப்ரைடு ரைஸ் தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment